மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
ஊட்டி : 'ஓட்டு சாவடி வந்து ஓட்டு அளியுங்கள்; பாதுகாப்பு கொடுக்க நாங்கள் இருக்கிறோம்,' என, வலியுறுத்தி, போலீசார், மத்திய ஆயுத படை போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.லோக்சபா தேர்தல் இம்மாதம், 19 ம் தேதி நடக்கிறது. கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'தேர்தலை ஒட்டி, 100 சதவீதம் ஓட்டு பதிவு நடைபெற வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 'தைரியமாக ஓட்டு அளிக்க வாருங்கள்; பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்,' என்பதை வலியுறுத்தும் வகையில் போலீசார் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் துவங்கி பேரணியை எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன், டி.எஸ்.பி.,க்கள்., யசோதா, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். பேரணி, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு, மெயின்பஜார், பஸ் ஸ்டாண்ட், முக்கோணம், காந்தள், ரோகிணி சென்று நிறைவடைந்தது. 100 போலீசார், 250 மத்திய பாதுகாப்பு படையினர், ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் பங்கேற்றனர்.எஸ்.பி., சுந்தரவடிவேல் கூறியதாவது, '' தேர்தலில் போது பொதுமக்கள் அச்சம், தயக்கமின்றி ஓட்டு அளிக்க முன்வர வேண்டும். பாதுகாப்பு கொடுக்க நாங்க இருக்கிறோம். அச்சமின்றி ஓட்டு போட ஓட்டு சாவடிக்கு வர வேண்டும்,'' என்றார்.
20-Dec-2025
20-Dec-2025