உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 10 ஆண்டுகளாக நீலகிரியில் ரேபிஸ் இல்லை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

10 ஆண்டுகளாக நீலகிரியில் ரேபிஸ் இல்லை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

குன்னுார் : 'நீலகிரியில், 10 ஆண்டுகளில் ரேபிஸ் நோய் மரணம் ஏற்படவில்லை,' என தெரிவிக்கப்பட்டது.குன்னுார் புனித அந்தோணியார் தொழிற்பயிற்சி நிலையத்தில், உலக ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஆனந்த் வரவேற்றார்.உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவன கல்வி அலுவலர் வரதராஜன் பேசியதாவது: ஆண்டுதோறும் செப்., 28ம் தேதி உலக ரேபிஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பாலுாட்டிகள் மத்தியில் ரேபிஸ் பரவுகிறது. வெறிபிடித்த விலங்கு மூலம் மற்றொரு விலங்குக்கு இந்த நோய் பரவுகிறது. 97 சதவீத வெறிபிடித்த நாய் கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது. வெறி நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் கிருமிகள் இருக்கும். கடித்த இடத்தில் இருந்து அது பயணம் செய்து மூளையை சென்றடைவது ரேபிஸ் நோயாகும். ரேபிஸ் தொற்று நோயாக மாறிவிட்டால், அந்த மனிதனை காப்பாற்றுவது கடினம். செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசி ஆண்டுதோறும் போடுவதாலும், நாய் கடித்த உடன் காயத்தை சோப்பு போட்டு, 15 நிமிடங்கள் ஓடும் நீரில் கழுவுவ வேண்டும். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசி எடுத்து கொள்வதால்,இந்த நோயை 100 சதவீதம் தடுக்கலாம்.உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவனம் கடந்த, 14 ஆண்டுகளாக நீலகிரியில் ரேபிஸ் தடுப்பு பணி மேற்கொண்டு வருகிறது. சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்வதுடன், தடுப்பூசி செலுத்துவதால் கடந்த, 10 ஆண்டுகளில் ரேபிஸ் நோய் மரணம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார். பயிற்சி நிலைய அலுவலர் மனோ நன்றி கூறினார்.நீலகிரி கால்நடை துறை இணை இயக்குனர் சத்தியநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், குன்னுார் கால்நடை மருத்துவமனையில் உதவி இயக்குனர் பார்த்தசாரதி, உதவியாளர்கள் தேவி, தீபா ஆகியோர், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை