உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை ரயில் பாதையில் அமர்ந்த சிறுத்தை

மலை ரயில் பாதையில் அமர்ந்த சிறுத்தை

குன்னுார்:குன்னுார் மலை ரயில் பாதையில் சிறுத்தை வந்து அமர்ந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதில், சிறுத்தைகள் இரவு நேரத்தில் மட்டுமே வந்தது. தற்போது பகல் நேரங்களிலும் அவ்வப்போது உலா வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் குன்னுார் மலைரயில் பாதையில் வடுக தோட்டம் - ஹில்குரோவ் அருகே சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ரயில்வே ஊழியர்களும் அச்சத்துடன் பணிக்கு சென்று வருகின்றனர்.மக்கள் கூறுகையில்,'கடந்த சில நாட்களாக வடுக தோட்டம் ஹில்குரோவ் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும், மலை ரயில் பாதையிலும் அவ்வப்போது சிறுத்தை வந்து செல்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மலை ரயில் பாதையில் வந்து அமர்ந்து வெயில் காய்கிறது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி