உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாயை கவ்வி சென்ற சிறுத்தை

நாயை கவ்வி சென்ற சிறுத்தை

குன்னுார்: குன்னுார் கேட்டில் பவுண்ட் பகுதியில் நாயை கவ்வி இழுத்து சென்ற சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் பகுதியில் இரவு நேரத்தில் மட்டுமே வந்த சிறுத்தைகள் அவ்வப்போது பகல் நேரத்திலும் வர துவங்கியுள்ளது. வளர்ப்பு நாய்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வேட்டையாடி செல்கிறது. இந்நிலையில், பாய்ஸ் கம்பெனி அருகே கார்டைட் தொழிற்சாலை கேட்டில் பவுண்ட் குடியிருப்பு பகுதியில் நாயை அடித்து இழுத்து கொன்று பாதியில் விட்டு சென்றுள்ளது. நேற்று காலை இதனை பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில்,'கார்டைட் தொழிற்சாலை வளாக பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால், சிறுத்தைகள் வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி