ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கோத்தகிரி; கோத்தகிரி உயிலிட்டி நீர்வீழ்ச்சியில், வறட்சியிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.கோத்தகிரியில் கோடநாடு காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது. அதில், சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடிக்காத, உயிலட்டி நீர்வீழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.கோத்தகிரி -கூக்கல்தொறை வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் தற்போதைய வறட்சியான காலநிலையிலும், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த அழகை கண்டுக்களித்து செல்கின்றனர்.இப்பகுதி, வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், அருவி அமைந்துள்ள பகுதியை மேம்படுத்தும் பட்சத்தில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.