உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொலிவான பெட்டா குயின் இன்ஜின்; குன்னுாரில் சோதனை ஓட்டம்

பொலிவான பெட்டா குயின் இன்ஜின்; குன்னுாரில் சோதனை ஓட்டம்

குன்னுார்; 'பெட்டா குயின்' என, அழைக்கப்படும், 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜின் டீசலுக்கு மாற்றி, பராமரிப்பு பணிகள் முடித்து, குன்னுார் மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது.நீலகிரி மலைரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படுகிறது. இந்த மலை ரயிலில், குன்னுார் வரை, 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜின் பயன்படுத்தி இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் நிலக்கரியில், இயங்கும் இன்ஜின்களால் ரயில் இயக்கப்பட்டது; அதன்பின், பர்னஸ் ஆயில் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, பர்னஸ் ஆயில் பயன்படுத்துவதை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், 3 பர்னஸ் ஆயில் இன்ஜின்கள், டீசல் இன்ஜின்களாக குன்னுார் பணிமனையில் மாற்றப்பட்டது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலைக்கு கொண்டு செல்லப்பட்ட, 'எக்ஸ்- 37397' எண் கொண்ட இன்ஜின், பர்னஸ் ஆயிலில் இருந்து டீசலுக்கு மாற்றப்பட்டதுடன், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இரு பெட்டிகள் மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் இந்த இன்ஜின், சோதனை ஓட்டம், நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை நடந்தது. ஆரம்பத்தில் இருந்ததை விட வேகம் சற்று அதிகரித்துடன், புகை மாசு குறைந்துள்ளது. விரைவில், இந்த இன்ஜின் மலை ரயில் சேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை