| ADDED : ஜன 10, 2024 10:38 PM
கூடலுார் : கூடலுார் புளியம்பாறை பகுதியில், அதிகாலையில் வந்த காட்டு யானை வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய சம்பவத்தில், 3 வன ஊழியர்கள் உயிர்த்தப்பினர்.கூடலுார் புளியம்பாறை மற்றும் பாடநதுறை பகுதிகளில், 'செலுக்காடி' மக்னா என்ற யானை உலா வருகிறது. அதிகாலை, 2.00 மணிக்கு புளியம்பாறை சாலையில் நடந்து வந்த போது, நாடுகாணி வனச்சரக வன ஊழியர்கள் அதன விரட்ட புளியம்பாறை சென்றனர்.அப்போது எதிரே வந்த யானை, அவர்கள் சென்ற வனத்துறை வாகனத்தின் முன்பகுதியை சேதப்படுத்தியது. வாகனத்தில் இருந்து, வனக்காவலர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர் வாசுதேவன், ஒட்டுனர் விக்னேஷ்வரன் சப்தமிட்டதை தொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது. இதனால், வன ஊழியர்கள் உயிர் தப்பினர்.தகவல் அறிந்த நாடுகாணி வனச் சரகர் வீரமணி, அப்பகுதிக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை செய்தார். யானை நடமாட்டத்தை வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.