மேலும் செய்திகள்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி கூட்டம்
30-Jun-2025
கூடலுார்,; கூடலுார் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் இ.கம்யூ., கட்சியின், 9வது தாலுகா மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு உஷேன் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன், ராஜூ முன்னிலை வகித்தனர். மாநாட்டை மாவட்ட குழு உறுப்பினர் குனசேகரன் துவக்கி வைத்தார். தாலுகா செயலாளர் முகமதுகனி ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார்.தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதில், தாலுகா செயலாளர் முகமதுகனி மீண்டும் செயலாளராக தேர்வு செய்யப்பட்டர். துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் நாசர், குழு உறுப்பினர்களாக குணசேரகன், தங்கராஜ், உஷேன், சாத்து, ராஜு, மகேந்திரன், கமலாட்சி, சாரதா தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில், 'அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும்; அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சேதமடைந்த சாலைகள் சீரமைக்க வேண்டும்; மனித- வனவிலங்கு மோதலை நிரந்தரமாக தடுக்க வேண்டும்;, வீடுகள் இல்லாத அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் இலவச வீடுகள் கட்டி தர வேண்டும்.பசுந்தேயிலை கிலோவுக்கு குறைந்த பட்சம், 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; பருவமழை காலத்தில் வேலையின்றி சிரமப்படும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, அரசு மழை கால நிவாரணம் வழங்க வேண்டும்,' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பழங்குடியின சங்க மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
30-Jun-2025