உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் தொழிற்சங்க அலுவலகம் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க., எதிர்ப்பு

சாலையோரம் தொழிற்சங்க அலுவலகம் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க., எதிர்ப்பு

கூடலுார் : கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து, தி.மு.க., தொழிற்சங்கமான, எல்.பி.எப்., அலுவலகம் அமைக்கும் பணிக்கு, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அ.தி.மு.க., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அப்போது, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தி.மு.க., தொழிற் சங்கமான எல்.பி.எப்., சார்பில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், அலுவலகம் கட்டுவது குறித்து அ.தி.மு.க.,வினருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, மாவட்ட செயலாளர் வினோத், நகர செயலாளர் அனுப்கான் மற்றும் அ.தி.மு.க.,வினர் அப்பகுதிக்கு சென்று, எல்.பி.எப்., தொழிற்சங்க அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அதனை அகற்ற வலியுறுத்தினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்தனர். அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், அ.தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை