உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அ.தி.மு.க., தொழிற் சங்க கூட்டம்

அ.தி.மு.க., தொழிற் சங்க கூட்டம்

ஊட்டி : நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொது கூட்டம் ஊட்டி ஐந்து லாந்தரில் நடந்தது. இதற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். உணவு துறை அமைச்சர் புத்திசந்திரன், தலைமை பேச்சாளர் கோவை தம்பி, தொழிற்சங்க நிர்வாகிகள் கோபால், மணி, துரை, குமார் ஆகியோர் பேசினர். ஊட்டி நகர செயலாளர் தேவராஜ், பேரவை செயலாளர் சுரேஷ்குமார், இளைஞரணி செயலாளர் ராஜாமுகம்மது, முன்னாள் நகர செயலாளர்கள் சுப்ரமணியம், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.கூடலூர் கூட்டத்திற்கு கூடலூர் ஒன்றிய செயலர் பத்மநாதன் வரவேற்றார். செயலர் ராஜாதங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அபு, பொதுக்குழு உறுப்பினர் ராயின், தலைமை பேச்சாளர் ரவி, இணைச் செயலர் கோயா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பாசறை மாநில இணை செயலர் விஷ்ணுபிரபு, தலைமை கழக பேச்சாளர்கள் பாலு, தாமு பேசினர். ஒன்றிய துணை செயலர் மொய்தீன், மாவட்ட பிரதநிதி முத்துவேல், ஒன்றிய அவை தலைவர் கந்தசாமி, நகர அவை தலைவர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு கூடலூர் செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை