மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
ஊட்டி:ஊட்டி ரோஜா பூங்கா நுழைவு வாயில் பகுதியில் குழிகளுக்கு, மண் நிரப்பி சமன் செய்யப்பட்டுள்ளதால், புழுதி ஏற்பட்டுள்ளது.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை அடுத்து, ரோஜா பூங்காவின் அழகை கண்டு களிக்க தவறுவதில்லை. இங்கு, பல வண்ணங்களில், 5,000 ரோஜா ரகங்கள் நடவு செய்யப்பட்டு, கோடை சீசன் நாட்களில் மலர்கள் பூத்து குலுங்கும் வகையில், பராமரிக்கப்பட்டு வருகிறது.இதனால், சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பூங்கா நுழைவு வாயில் சாலை பகுதியில், சிறு, சிறு குழிகள் ஏற்பட்டுள்ளன. குழிகளை 'கான்ரீட்' கலவை அல்லது தார் போட்டு, சமன் செய்வதற்கு பதிலாக, மண் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளதால், வாகனங்கள் சென்று வரும் போது, புழுதி ஏற்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.கோடை சீசனுக்காக, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பூங்கா பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், முகப்பு வாயில் குழிகளை தார் கலவை கொண்டு சமன் செய்வது அவசியம்.
20-Dec-2025
20-Dec-2025