உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்புகளில் பழக்கழிவுகளை வீசுவதை தவிர்க்கணும்; வனத்துறை வேண்டுகோள்

குடியிருப்புகளில் பழக்கழிவுகளை வீசுவதை தவிர்க்கணும்; வனத்துறை வேண்டுகோள்

ஊட்டி:குடியிருப்புகளில் கரடி உலா வருவதை தடுக்க உணவு, பழக்கழிவுகளை வீசி எறிவதை மக்கள் தடுக்க வேண்டும்.நீலகிரி, 67 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும். வன ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, விதிமீறிய கட்டடங்கள் பெருகியதால், வனத்தில் வாழும், யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பை நோக்கி படையெடுக்க ஆரம்பித்ததால் உயிரிழப்பு, வனக்கொள்ளை சம்பவங்களும் அதிகரித்தது. விவசாயமும் பாதிக்கப்பட்டது.குறிப்பாக, சமீபகாலமாக, ஊட்டி, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் குடியிருப்புகளை நோக்கி கரடி உலா வருவது அதிகரித்துள்ளது. கரடியால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், '' நகர் பகுதிக்கு கரடி உலா வர முக்கிய காரணம் உணவு, பழக்கழிவுகள் கண்ட இடத்தில் வீசி எறிவதால் ருசி பார்க்க வருகிறது. இதை பொதுமக்கள் தடுக்க வேண்டும். தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால், கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், ''மாநில அரசு வனப்பரப்பை, 33 சதவீதம் விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 67 சதவீதம் வனப்பரப்பை கொண்ட நீலகிரி வனம், சுற்றுசூழலை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கரடி அச்சுறுத்தலுக்கு கூண்டு வைத்து பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை