உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஊட்டி: பள்ளி மாணவர்களிடையே மண் வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மண்வளம் பாதுகாப்பு, 2025--26ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 9ம் வகுப்பு மற்றும், 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மண்வளம் பாதுகாப்பு குறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், மண் ஆய்வின் முக்கியத்துவம், மண் பரிசோதனை செய்வது குறித்தும், மண் ஆய்வு கூட வேளாண்மை அலுவலர்கள் விரிவான பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், பயிருக்கு தேவையான முதன்மை சத்துக்கள், இரண்டாம் நிலை சத்துக்கள் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் வேளாண்மை அலுவலர்கள் விளக்கி வருகின்றனர். தவிர, இந்த குழுவினர், மாணவர்களை பள்ளிக்கு அருகில் உள்ள விவசாயிகளின் தோட்டங்களுக்கு அழைத்து சென்று மண் பரிசோதனைக்காக, மண் மாதிரி எடுப்பது குறித்து செயல் விளக்க பயிற்சி வழங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி