உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மக்கும், மக்காத குப்பை மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மக்கும், மக்காத குப்பை மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்:காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஐ.டி.சி., நிர்வாகம், ராக் மையம் ஆகியவை இணைந்து நடத்திய, மாணவர்கள் இடையே, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில், ரூபா பேசினார். மக்கும், மக்காத குப்பையை தரம் பிரிப்பது குறித்து விளக்கப்பட்டது. வீடுகளில் அன்றாட பயன்படுத்தும் உணவு பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, பால் கவர், எண்ணெய் கவர் ஆகியவற்றை தரம் பிரித்து, தனியாக வைக்க வேண்டும். கடைகளுக்கு செல்லும்போது ஒயர் கூடை, துணிப்பையையும், இறைச்சி கடைக்கு செல்லும் போது பாத்திரம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டில் உடைந்த கண்ணாடி பொருட்களை, பேப்பரில் சுற்றி தனியாக போட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.பள்ளியின் முதல்வர் சசிகலா, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை