உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நுாலகமும்,- மதுவிலக்கும் விழிப்புணர்வு பேரணி

 நுாலகமும்,- மதுவிலக்கும் விழிப்புணர்வு பேரணி

கோத்தகிரி: கோத்தகிரி அரவேணு கிளை நுாலகத்தில், 58வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, 'நுாலகமும், மதுவிலக்கும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரவேனு கிளை நுாலக வாசகர் வட்டம் மற்றும் அரவேனு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய பேரணிக்கு, வாசகர் வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் உமா ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளியில் துவங்கிய பேரணி, அரவேனு சாலை வழியாக, மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. அதில், 'நுாலகமும், மதுவிலக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு' குறித்து, பதாகைகள் ஏந்தியபடி, மாணவ, மாணவியர், பேரணியில் கோஷம் எழுப்பி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில், ஆசிரியர்கள் செந்தில் குமார், ராஜகுமாரி, சகிலாபேபி, வினிதா மற்றும் சப்தமி உட்பட, வாசகர் வட்ட நிர்வாகிகள், மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நுாலகர் குமார் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை