உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்பு

கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் வீட்டு கிணற்றில் யானை குட்டி விழுந்துள்ளது. தாய் யானை குட்டியை காப்பாற்ற போராடுவதுடன், வீடுகளை இடித்து வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது தகவல் அறிந்த வனத்துறையினர் குட்டியானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தாய் யானையை விரட்டி விட்டு கிணறு அருகே பள்ளம் தோண்டி பாதை அமைத்தனர். 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, குட்டி யானை கிணற்றில் இருந்து மேலே வந்தது. தற்போது அந்த குட்டி யானை தாய் யானையுடன் சேர்ந்துவிட்டதா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை