உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சீரமைத்த சில மாதங்களில் சேதமான பட்பயர் சாலை

சீரமைத்த சில மாதங்களில் சேதமான பட்பயர் சாலை

ஊட்டி; ஊட்டி பட்பயர் சாலை சீரமைத்த சில மாதங்களில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பட்பயர் சாலையில் அரசு மருத்துவ கல்லுாரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையை மக்கள் அதிக அளவில் போக்குவரத்துக்கு பயன்படுத்துகின்றனர். சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது. சில மாதங்கள் ஆன நிலையில் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் , குழியுமாக காட்சியளிக்கிறது. மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை மேலும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், 'பட்பயர் சாலை சீரமைத்த சில மாதங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஆங்காங்கே பெயர்ந்த இடங்களில் பேட்ச் வொர்க் செய்து தருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை