உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சாலையில் போடப்படும் மூங்கில் முட்கள்

 சாலையில் போடப்படும் மூங்கில் முட்கள்

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் தனியார் எஸ்டேட்டிற்கு உட்பட்ட பகுதியில், முதிர்ந்த மூங்கில்களை வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், சேரம்பாடி பஜாரில் இருந்து, கண்ணம் வயல் செல்லும் சாலையின் இரண்டு பக்கங்களிலும், மூங்கில்கள் வெட்டப்படும் நிலையில், அதில், அகற்றப்படும் மூங்கில் முட்கள் நிறைந்த கிளைகளை, சாலை மற்றும் சாலையின் ஓரப்பகுதியில் ஊழியர்கள் போட்டு செல்கின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களின் டயர்களில் பஞ்சர் ஏற்படுகிறது. எனவே, சாலையோரம் கிடக்கும் மூங்கில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை