மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன சோதனை 'பிளாஸ்டிக்' பறிமுதல்
03-Feb-2025
பந்தலுார்; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.பந்தலுார் தாசில்தார் சிராஜுநிஷா, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான, வருவாய் துறையினர், பந்தலுார் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில், செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், 6 கடை உரிமையாளர்களுக்கு, 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
03-Feb-2025