மேலும் செய்திகள்
கவிபுரம் கரட்டில் தீ
06-Mar-2025
குன்னுார்:குன்னுாரில், தேன்கூட்டில் தேன் உட்கொள்ள, மின்கம்பத்தில் ஏறிய கரடி, ஷாக் அடித்து கீழே விழுந்து உயிரிழந்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் நான்சச் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் தேயிலை தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் தேன்கூடு இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, தேன் உட்கொள்ள இந்த மின்கம்பத்தில் ஏறிய கரடி, ஷாக் அடித்து கீழே விழுந்து இறந்துள்ளது.நேற்று காலை குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனவர்கள் ராஜ்குமார், திலீப் முன்னிலையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் கரடியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இறந்த ஆண் கரடிக்கு, 5 வயது இருக்கும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அதே இடத்தில் கரடியின் உடலை வனத்துறையினர் எரித்தனர்.
06-Mar-2025