உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாரதிய வித்யா பவன் விழா; சாதனையாளருக்கு பாராட்டு

பாரதிய வித்யா பவன் விழா; சாதனையாளருக்கு பாராட்டு

குன்னுார்; குன்னூரில் பாரதிய வித்யா பவன் சார்பில், குலபதி முன்ஷி விருது வழங்கும் விழா நடந்தது.பல்வேறு துறைகளில், சமூகத்திற்கு சிறந்த சேவை செய்த குடிமக்களை அங்கீகரித்து கவுரவிக்கும் வகையில், பாரதிய வித்யாபவன், நீலகிரி மையம் சார்பில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான குலபதி முன்ஷி விருது வழங்கும் விழா, குன்னுார் டைகர்ஹில் பகுதியில் தனியார் ஓட்டலில் நடந்தது. அதில், அதிகரட்டியை சேர்ந்த டாக்டர் மீனாட்சி வெங்கடராமனுக்கு விருது வழங்கப்பட்டது. நீலகிரி கேந்திரா பாரதிய வித்யா பவன் துணை தலைவர், கீதா சீனிவாசன் விருது வழங்கி பேசியதாவது: பாரதிய வித்யா பவனை, குலபதி முன்ஷி, 1938ல் காந்தியின் ஆசியுடன் நிறுவினார். முன்ஷி சிறந்த வக்கீல், இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்களில் ஒருவர். தனது மாணவ பருவத்தில், ஸ்ரீ அரவிந்தரின் ஊக்கமளிக்கும் செல்வாக்கின் கீழ் வந்த முன்ஷி, மகாத்மா காந்தி, சர்தார் படேல், நேரு, திலகர், அன்னி பெசன்ட் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இவரின் தீர்க்கமான ஆற்றலால் துவங்கிய பாரதிய வித்யா பவன் தற்போது, 118 மையங்களையும், நாடு முழுவதும், 373 கல்வி நிறுவனங்களையும், 7 வெளிநாட்டு மையங்களையும் கொண்டுள்ளது. 1992ல் பாரதிய வித்யா பவனுக்கு, மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான ராஜிவ் காந்தி விருது பெற்றுள்ளது. 2002ல் சர்வதேச காந்தி அமைதி பரிசு வழங்கப்பட்டது,'' என்றார். தலைவர் கனகலதா முகுந்த், செயலாளர் உஷா, ஸ்ரீமதி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை