மேலும் செய்திகள்
முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் அனுசரிப்பு
01-Nov-2024
கோத்தகிரி; கோத்தகிரியில், காங்., சார்பில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.வட்டார தலைவர் சில்லபாபு தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர் கமலா சீராளன் மற்றும் மாவட்ட பொது செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் சதுக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து, வன்முறைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகி ரவி வரவேற்றார். சிவாஜி ராமன் நன்றி கூறினார்.
01-Nov-2024