உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் மாற்றம்

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் மாற்றம்

சூலுார் : லோக்சபா தேர்தலை ஒட்டி , சூலுாரில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே மாவட்டம் மற்றும் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள், சொந்த தொகுதியில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்னம், பவானி சாகருக்கு மாற்றப்பட்டார். கோபிசெட்டிபாளையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சண்முகவேல், கருமத்தம்பட்டிக்கு மாற்றப்பட்டு, அவர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். தற்போது, சூலுார் தாசில்தார் நித்திலவல்லி, அன்னூர் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள தனசேகர், சூலுார் தாசில்தாராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த மாதம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., யாக தங்க ராமன் பொறுப்பேற்றுள்ளார். இது தவிர மேலும், சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ