ஊட்டி ஜெயின் அமைப்பு சார்பில் சத்துருமாஷ் விழா
ஊட்டி; ஊட்டி ஜெயின் மூர்த்தி பூஜக்பூஜை சங்கம் சார்பில், 'சத்துருமாஷ்' சிறப்பு சொற்பொழிவு நடந்தது.ஊட்டி ஜெயின்மூர்த்தி பூஜக்சங்கம் சார்பாக, நான்கு மாத 'சத்துருமாஷ்' எனப்படும் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் விரதம் நிகழ்வுகள் நடந்து வருகிறது. மேலும், சமண சாத்வி ஸ்ரீ குருக்கள், பிரிய சவுமியா ஜனா, பிரியக்யகியான் ஜனா மற்றும் பிரியயத்தாஷ் ஜனா ஆகியோருக்கு, மேளதாளத்துடன், வெள்ளி கலச வரவேற்புடன், சுவாமி வாசு பூஜ்ய கோவிலை நோக்கி பிரவேசித்தனர்.இந்த நிகழ்ச்சியில், ஊட்டி, குன்னுார், கோவை, ஈரோடு, திருப்பத்துார், சென்னை மற்றும் பெங்களூரு உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து ஜெயின் சமூகத்தினர் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஏற்பாடுகளை ஊட்டி மூர்த்தி பூஜக்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.