உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூடப்பட்ட கழிப்பிடம் பயணிகள் பாதிப்பு

மூடப்பட்ட கழிப்பிடம் பயணிகள் பாதிப்பு

குன்னுார் : குன்னுார்- ஊட்டி சாலை அருவங்காடு பகுதியில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் ஜெகதளா பேரூராட்சி சார்பில் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், இங்குள்ள கழிப்பிடம் திறக்கப்படாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் இருந்த நிலையில், கழிப்பிடத்தை மூடி உள்ளதாக கூறப்படுகிறது. கோடை சீசன் நிலவுவதால், உடனடியாக கழிப்பிடத்தை திறந்து, துாய்மையான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை