மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
ஊட்டி:நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது தேவைகள் குறித்து, மக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன.இவ்வாறு பெறப்படும் மனுக்கள் அன்றைய தினமே பரிசீலனை செய்யப்பட்டு, அந்தந்த துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நன்னடத்தை அமலில் உள்ளதால், துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. அதனால், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் மக்களிடம், அலுவலர்கள் மனுக்களை வாங்கி, ஒரு பெட்டியில் சேகரித்து வருகின்றனர்.
20-Dec-2025
20-Dec-2025