உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு

இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு

ஊட்டி, : நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணியாற்றி வந்த வாஞ்சிநாதன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இணைபதிவாளராக மாறுதலாகியுள்ளார். சேலத்தில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளராக பணியாற்றி வந்த, தயாளன் நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக நேற்று பொறுப்பேற்றார். கூட்டுறவு துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் கூறுகையில்,''நீலகிரி மக்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான கோரிக்கைகள் எதுவாக இருப்பின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடனடியாக தீர்வு காணப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ