உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பட்டர் புரூட் செடிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு; தோட்டக்கலை பண்ணையில் தாய் செடிகள் நடவு

 பட்டர் புரூட் செடிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு; தோட்டக்கலை பண்ணையில் தாய் செடிகள் நடவு

கூடலுார்: கூடலுார் தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி, குறுமிளகை தொடர்ந்து, பட்டர் புரூட் செடிகள் அதிகளவில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடலுார் நாடுகாணி அருகே உள்ள, பொன்னுார் அரசு தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி மற்றும் ஊடுபயிர்களான குறுமிளகு, பாக்கு, கிராம்பு செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த மற்றும் மானிய விலையில் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கூடலுாரில் உற்பத்தியாகும், பட்டர் புரூட் காய்களுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவில் அதிக வரவேற்பு உள்ளது. இதன் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் வீட்டு தோட்டங்கள் மட்டுமின்றி தேயிலை, காபி தோட்டங்களில் ஊடு பயிராக பட்டர் புரூட் செடிகளை நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பட்டர் புருட் நாற்றுகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், பட்டர் புரூட் செடிகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். இச்செடிகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் வகையில், தனி இடம் ஒதுக்கி உயர்தரமான பட்டர் புரூட் தாய் செடிகள் நடவு செய்துள்ளனர். இந்த செடிகளில் இருந்து நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் காபி, தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக குறுமிளகு, பாக்கு போன்று தற்போது பட்டர் புரூட் செடிகளும் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகளில் தேவையை கருத்தில் கொண்டு, உயர்தரமான பட்டர் புரூட் செடிகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்