உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலை, மசினகுடியில் டிஜிட்டல் முறையில் புலிகள் கணக்கெடுப்பு! அதிகபட்சமாக, 391 இடங்களில் 782 கேமராக்கள்

முதுமலை, மசினகுடியில் டிஜிட்டல் முறையில் புலிகள் கணக்கெடுப்பு! அதிகபட்சமாக, 391 இடங்களில் 782 கேமராக்கள்

கூடலுார்: முதுமலை, மசினகுடி பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக முதன் முறையாக, 391 இடங்களில், 782 தானியங்கி கேமராக்கள் பொருத்து பணி நடந்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், தேசியபுலிகள் ஆணையத்தின் சார்பில், அகில இந்திய புலிகள் மதிப்பீடு-2026 திட்டம் குறித்து, தென் மண்டல அளவிலான, புலிகள் கணக்கெடுப்பு திட்ட பயிற்சி முகாம் செப்., 24ல் துவங்கி, 26 தேதி வரை மூன்று நாட்கள் நடந்தது. அதில், 'இந்திய புலிகள் மதிப்பீடு, கணக்கெடுப்பு அவசியம், புலிகள் கணக்கெடுப்பு முறைகள்' குறித்து, தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, நான்கு முறைகளில், புலிகள் கணக்கெடுப்பு பணிகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேச புலிகள் காப்பக வன அதிகாரிகள், வனச்சரகர்கள் மற்றும் வன உயிரியலாளர்கள், இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் நிபுணர்கள் பங்கேற்றனர்.

பொருத்தப்படும் தானியங்கி கேமராக்கள்

இதன், தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், 'அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு-2026, பாகம் 3ன் படி, கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலக்கோட்டை வனச்சரக, முன்கள வன ஊழியர்களுக்கு, தொப்பக்காடு பகுதியிலும், மசினகுடி, சீகூர், சிங்கார, நீலகிரி கிழக்கு சரிவு முன்கள வன ஊழியர்களுக்கு மசினகுடியிலும் புலிகள் கணக்கெடுப்பு பணியில், தானியங்கி கேமராக்கள் பயன்பாடு பொருத்தும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, 2-வது நாளான நேற்று, 'முதுமலை புலிகள் காப்பகத்தில், 140 இடங்களிலும், மசினகுடி கோட்டத்தில், 251 இடங்கள்' என, தலா இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம், 782 கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஐந்து நாட்கள் நடக்கும். வனத்துறையினர் கூறுகையில், ' புலிகள் கணக்கெடுப்பு பணியின் பாகம் 3-ன் படி முதுமலை, மசினகுடி பகுதியில் புலிகள் கணக்கெடுப்புக்காக தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்த நாளிலிருந்து, தொடர்ந்து, 30 நாட்கள் அதில் பதிவாகும் படங்களை பதிவிறக்கம் செய்து அதன் அடிப்படையில் புலிகள் எண்ணிக்கை குறித்து, பாகம்- 4ன் படி கணக்கெடுப்பு நடைபெறும். இது முழுவதும் டிஜிட்டல் முறையில் நடப்பதால், அதன் முடிவு துல்லியமாக இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ