உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சோலூர் சாலையில் 3 பஸ்கள் சிறைபிடிப்பு

சோலூர் சாலையில் 3 பஸ்கள் சிறைபிடிப்பு

ஊட்டி : ஊட்டி அருகே கோக்கால் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி அப்பகுதி மக்கள் 3 அரசு பஸ்களை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே உள்ள கோக்கால் பகுதிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு இயக்கப்படும் பஸ் 44 சீட் கொண்டது. காலை நேரங்களில் கோக்கால் பகுதியில் இருந்து இப்பஸ்சில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என 100க்கும் மேற்பட்டோர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் பஸ்சின் கூரை மீதும் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து பலமுறை போக்குவரத்து கிளை கழக மேலாளருக்கு புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம், அதிக பயணிகள் காரணமாக ஊட்டிக்கு படிக்க வரும் பள்ளி மாணவ, மாணவியர்கள் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஊட்டி-சோலூர் சந்திப்பில் அப்பகுதி மக்கள் 3 அரசு பஸ்களை சிறைப்பிடித்தனர். இது குறித்து தகவல் தெரிந்ததும் அரசு போக்குவரத்து கழக கிளை-2 மேலாளர் கணேஷ் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். வரும் செவ்வாய் கிழமை முதல் கோக்காலுக்கு கூடுதலாக ஒரு 'டிரிப்' இயக்கப்படும் என உறுதியளித்தால், பஸ்களை விடுவித்து மக்கள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை