மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
மஞ்சூர் : நீலகிரி மாவட்டம், மஞ்சூர் வனப்பகுதியையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் வனவிலங்குகள் நடமாடுவதை காண முடிகிறது. இதனால், கிண்ணக்கொரை, கோலிஹட்டி, தேனாடு கிட்டட்டி, எடக்காடு, முள்ளிகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து சிறுத்தைகள் மர்மமான முறையில் பலியாகி வருகின்றன. நேற்று அதிகாலையில் மஞ்சூர் அருகே காந்திகண்டி பகுதி தேயிலை தோட்டத்தில் 2 வயதுள்ள ஆண் சிறுத்தை தலை, வாய், காது பகுதிகளில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது.வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார், தெற்கு வனக்கோட்ட அலுவலர் அனுராக்மிஸ்ரா, குந்தா ரேஞ்சர் ராமசாமி, வன ஊழியர்கள் சுப்ரமணி, ரவி உட்பட பலர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவர் கலைவாணன் பிரேத பரிசோதனை செய்த பின் சிறுத்தையின் உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது.
03-Oct-2025