உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சிகளில் 16 மனுக்கள் தள்ளுபடி

நகராட்சிகளில் 16 மனுக்கள் தள்ளுபடி

ஊட்டி : நீலகிரியில் உள்ள 4 நகராட்சிகளில் 16 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில், ஊட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களும், குன்னூர் நகராட்சியில் தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கூடலூர் நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 7 மனுக்களில் 1 மனுவும், நெல்லியாளம் நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 13 மனுக்களில் 1 மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு 255 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 4 மனுக்கள்; குன்னூரில் உள்ள 30 வார்டுகளுக்கு 210 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கூடலூர் உள்ள 21 வார்டுகளுக்கு 140 பேர் மனு தாக்கல் செய்யப்பட்டதில், அனைத்து மனுக்களும் ஏற்றுகொள்ளப்பட்டன. நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 181 பேர் மனுதாக்கல் செய்யப்பட்டதில், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை