உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அமைச்சர்கள் முன்னிலையில் போலீசாருக்கு டோஸ்

அமைச்சர்கள் முன்னிலையில் போலீசாருக்கு டோஸ்

குன்னுார்;குன்னுாரில் போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் 'டோஸ்' விட்டார்.குன்னுாரில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில், நகராட்சி பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி கல்வெட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் துவக்கி வைத்தார்.விழாவில், நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். முன்னதாக, மகளிர் இலவச பஸ் பயணத்தை துவக்கி வைத்து வந்த போது, கல்வெட்டு அருகே வரும் வரை கடும் கூட்ட நெரிசலில் அமைச்சர்கள் வந்தனர். அப்போது, கலெக்டர் அருணா போலீசாரை பார்த்து,''நீங்கள் எதற்கு இருக்கிறீர்கள்; நாங்கள் தான் கூட்டி வர வேண்டுமா,''என, கேள்வி எழுப்பினார். அதிர்ச்சியான போலீசார் 'அலெர்ட்' ஆகினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை