உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் நகராட்சியின் திட்டமிடாத பணிகளால்...வீணடிக்கப்படும் நிதி! போதிய அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி

குன்னுார் நகராட்சியின் திட்டமிடாத பணிகளால்...வீணடிக்கப்படும் நிதி! போதிய அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி

குன்னுார;குன்னுாரில் மற்ற துறைகளின் இடங்களில் அரசு திட்டங்களை செயல்படுத்தி, நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி சார்பில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மக்களுக்கு தேவையான இடங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகளை செய்யாமல், மாற்று துறைகளின் இடத்தில் வளர்ச்சிப் பணிகளை துவக்கி நிதி வீணடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.l குன்னுார் சாமாண்ணா பார்க் பகுதி ரயில்வே இடத்தில் நகராட்சியால், பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கழிப்பிடம் அமைத்து திறக்கப்படும் போது ரயில்வே துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.l டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி சார்பில் கழிப்பிடம் கட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் பயனின்றி கிடக்கிறது.l கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் அரிய வகை மரங்கள் நடவு செய்த இடத்தில் திடீரென பொக்லின் வரவழைக்கப்பட்டு கழிப்பிடம் அமைப்பதாக மண் தோண்டப்பட்ட போது, வனத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.l இந்து அறநிலையத்துறையின் இடத்தில் பார்க்கிங் தளம் அமைப்பதற்காக, ஆரம்ப கட்ட பணியை துவக்கிய போது, இந்து அறநிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.'வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட இடத்தை முழுமையாக தேர்வு செய்து, 'சர்வே' செய்து அதன் பிறகு, மக்களின் திட்டங்களை தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும்,' என்ற அரசின் உத்தரவு இங்கு மீறப்பட்டு வருகிறது.லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது: மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம். புகார்கள் தெரிவித்தால், இங்கு உள்ள அதிகாரிகள் அதற்கான உரிய விளக்கமும் அளிப்பதில்லை. தமிழகத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில் குன்னுாரில் மட்டும் இலவச கழிப்பிடம் இல்லாமல் உள்ளது. இதே போல வெளியூர் பஸ்கள் நிறுத்தும் இடத்திலும் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த நுகர்வோர் காலாண்டு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மக்களுக்கு தேவையான இடத்தில் கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்னும் பணிகள் துவக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ