கோத்தகிரி அருகே ஷாக் அடித்து எட்டு வயதுடைய ஆண் கரடி பலி
கோத்தகிரி: கோத்தகிரி அருகே, மின்சாரம் தாக்கியதில், ஆண் கரடி பலியானது தொடர்பாக, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோத்தகிரி அரவேனு உட்பட, சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது, அரவேனு அள்ளமனை பகுதியில் மரம் விழுந்ததில், மின் கம்பி அறுந்து தரையில் விழுந்துள்ளது. அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற, 8 வயதுடைய ஆண் கரடி, மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின்படி, குறிப்பிட்ட இடத்தில் வனத்துறையினர் நேற்று காலை ஆய்வு செய்தனர். கரடியின் உடலை மீட்ட வனத்துறையினர், லாங்க்வுட் சோலைக்கு கொண்டு சென்று, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, உதவி வனப் பாதுகாவலர் மணிமாறன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தபின், அதே இடத்தில் உடல் எரிக்கப்பட்டது.