உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறாத விழிப்புணர்வு பேரணி: சோர்வடைந்து தரையில் அமர்ந்த ஊழியர்கள்

 குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறாத விழிப்புணர்வு பேரணி: சோர்வடைந்து தரையில் அமர்ந்த ஊழியர்கள்

ஊட்டி: பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறாததால், மகளிர் திட்ட ஊழியர்கள் சோர்வடைந்து தரையில் அமர்ந்தனர். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை , 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான பேரணியில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மகளிர் திட்ட ஊழியர்கள் பலர் வந்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக மகளிர் திட்ட ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் பேரணிக்காக காத்திருந்தனர். நண்பகல், 12:00 மணி நெருங்கியும் கலெக்டர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. காத்திருந்த மகளிர் திட்ட ஊழியர்கள் சோர்வடைந்து தரையில் அமர்ந்தனர். இதை அறிந்த மகளிர் திட்ட அதிகாரி ஜெயராமன், பேரணியை துவக்கி வைத்தனர். பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று முடிந்தது. இந்த நிகழ்வால் மகளிர் அதிருப்தி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி