சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கூடலூர்:-கூடலூரில் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பாக கூடலூர் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் மாணவர் இடைநிற்றல் குறைப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கூடலூர் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை, கூடலூர் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், மார்தோமா கல்வி சொசைட்டி செயலாளர் ஜேக்கப்ஜான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஊர்வலத்தில், சுற்றுசூழல் பாதுகாப்பு, இடைநிற்றல் மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது. அங்கு, மாணவர்களிடையே கட்டுரை, ஓவியம், மனப்பாடம் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அதேபோல், ஊட்டி புனித தெரசன்னை பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இதில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஐயப்பன், ஆனந்தி, புளியாம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், எஸ்.ஐ., கபில்தேவ், தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், சாரணிய பயிற்சி ஆணையர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.