உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆகாய தாமரையால் ஆற்று நீர் மாசுபடும் அபாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

ஆகாய தாமரையால் ஆற்று நீர் மாசுபடும் அபாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

கூடலுார்;முதுமலை மாயாறு ஆற்றில், ஆகாயத்தாமரை செடிகள் அதிகரிக்க துவங்கியுள்ளதால், ஆற்று நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம். முதுமலை புலிகள் காப்பகம் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வன உயிரினங்களில் முக்கிய வாழ்விடமாகும். இவைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், இவ்வழியாக செல்லும் மாயாறு ஆறு, முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக கோடை கால வறட்சியின் போது வனவிலங்குகள் குடிநீர் தேவைக்கு இந்த ஆற்றை மட்டும் நம்பியுள்ளன.மேலும், வளர்ப்பு யானைகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், குளிக்கவும் இந்த ஆற்றுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி கிராம மக்கள் இந்த ஆற்றுநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெப்பக்காடு பகுதியில், மாயாறு ஆற்றில் ஆகாய தாமரை வளர துவங்கி உள்ளது. இதனால், ஆற்று நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'ஆகாய தாமரைக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம் வேகமாக பரவுகிறது. இவை மாயார் ஆற்றில் வளர துவங்கி இருப்பதால், ஆற்று நீர் மாசுபடுவதுடன், இதனை நம்பியுள்ள வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் இவைகள் வளராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை