உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நிலுவை சம்பளம் கேட்டு எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

 நிலுவை சம்பளம் கேட்டு எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, இரண்டு மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி, தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலுார் தேவர்சோலை அருகே, உள்ள தனியார் எஸ்டேடில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த செப்., அக்., மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் வருவாய் இன்றி குடும்ப செலவிற்கு கூட, சிரமப்பட்டு வருகின்றனர். நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து, நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதில், 'இவ்வாரம் துவக்கத்தில், நிலுவை சம்பளம் வழங்கப்படும்,' என, நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், நிலுவை சம்பளம் வழங்கவில்லை. அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள், நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். தொழிலாளர்கள் கூறுகையில், 'இரண்டு மாதமாக உள்ள, நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிலுவை சம்பளத்தை வழங்கவில்லையெனில் போராட்டம் தொடரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை