உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மானிய விலையில் பண்ணை கருவிகள்

மானிய விலையில் பண்ணை கருவிகள்

சூலுார்;சுல்தான்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பண்ணை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வேளாண் இணை இயக்குனர் பெருமாள் சாமி விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளை வழங்கி பேசுகையில், ''நிலம் உள்ள விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொடுத்து மானிய விலையில் பண்ணை கருவிகளை பெற்றுக்கொள்ளலாம். நிலம் இல்லாத விவசாய கூலி தொழிலாளிகள், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை சமர்ப்பித்து இத்திட்டத்தின் பலன்களை அடையலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கடப்பாரை, மண்வெட்டி, கொத்து, அருவாள், சட்டி ஆகியவை, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. இவற்றின் மொத்த விலை, 3 ஆயிரத்து 100 ரூபாய் ஆகும். மானியத்தை கழித்து, ஆயிரத்து, 533 ரூபாய் செலுத்தி கருவிகளை பெற்றுக்கொள்ளலாம். 123 பயனாளிகளுக்கு பண்ணை கருவிகள் வழங்கப்பட உள்ளன,'' என்றார்.வேளாண் அலுவலர் குருசாமி, உதவி அலுவலர்கள் ரமேஷ், குமணன், பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி