உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முள்ளன் வயல் பகுதியில் கரடி உலா வருவதால் அச்சம்

முள்ளன் வயல் பகுதியில் கரடி உலா வருவதால் அச்சம்

பந்தலுார்:பந்தலுார் அருகே முள்ளன்வயல் பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பந்தலுார் அருகே முள்ளன்வயல் பகுதி உள்ளது. இதனை ஒட்டி அயனிபிறா, உப்பம்பிறா,தோட்டபிறா உள்ளிட்ட கிராம பகுதிகளும் அமைந்துள்ளது. ஒரு பகுதி கேரளா மாநில எல்லை பகுதியாகவும், மறுபகுதி தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கரடி ஒன்று இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கிறது. நெடுஞ்சாலையில் இருந்து இந்த பகுதிகளுக்கு செல்ல வாகன வசதி இல்லாத நிலையில், பள்ளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். மக்கள் கூறுகையில்,' கரடிகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை