உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் மூன்று தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 5,299 பேர் சேர்ப்பு : மொத்தம் 5,84,260 வாக்காளர்கள்

நீலகிரியில் மூன்று தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 5,299 பேர் சேர்ப்பு : மொத்தம் 5,84,260 வாக்காளர்கள்

ஊட்டி; நீலகிரியில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது; மூன்று தொகுதிகளில் மொத்தம், 5 லட்சத்து 84 ஆயிரத்து 260 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு அக் ., மாதம் வெளியிடப்பட்டது. அதில், 5 லட்சத்து 78 ஆயிரத்து 961 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன்பின், அக்., 29ம் தேதி முதல் நவ., 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்தது. அதில், வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் லட்சுமி பவ்யா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம்

ஊட்டி சட்டசபை தொகுதியில்,'94,581ஆண் வாக்காளர்கள்; 1,03,813 பெண் வாக்காளர்கள்; மூன்றாம் பாலினத்தவர், 11 பேர்,' என, மொத்தம், 1,98,405 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கூடலுார் (தனி) சட்டசபை தொகுதியில், '94, 582 ஆண் வாக்காளர்கள்; 1,00, 727 பெண் வாக்காளர்கள்; மூன்றாம் பாலினத்தவர், 3 பேர்,' என , மொத்தம்,1,95,312 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். குன்னுார் சட்டசபை தொகுதியில்,'90,038 ஆண் வாக்காளர்கள்; 1,00,501 பெண் வாக்காளர்கள்; மூன்றாம் பாலினத்தவர், 4 பேர்,' என, 1,90,543 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மூன்று சட்டசபை தொகுதியில் மொத்தம், 5,84,260 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த அக்., மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது, 5,299 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறுகையில்,''நீலகிரியில் இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதன்படி, மூன்று தொகுதிகளில், 5,84,260 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், 'ஊட்டி தொகுதி-239; குன்னுார் தொகுதி-224; கூடலுார் (தனி) தொகுதி- 227,' என, மொத்தம், 690 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஆர்.டி.ஓ., க்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை