உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அன்னூரில் முதல் பண பட்டுவாடா துவங்கியது; பறக்கும் படை எங்கே?

அன்னூரில் முதல் பண பட்டுவாடா துவங்கியது; பறக்கும் படை எங்கே?

அன்னுார் : முக்கிய அரசியல் கட்சி, சாதனை நோட்டீஸ்களுடன் இந்த தேர்தலுக்கான முதல் பண பட்டுவாடாவை நேற்று தொடங்கியது.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரம் துவங்கி உள்ளது. நீலகிரி தொகுதியில் தி.மு.க., சார்பில் ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க.,வே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்.இந்நிலையில் நேற்று ஒரு முக்கிய அரசியல் கட்சியின் நிர்வாகிகள் மூன்று கார்களில் ஊராட்சிகள் தோறும் சென்று நிர்வாகிகளிடம் முதல் கட்ட பணப்பட்டுவாடா செய்தனர். இத்துடன் துண்டு பிரசுரங்களையும் வீடு வீடாக விநியோகிக்க வழங்கினர். வீட்டின் கதவில் ஒட்டுவதற்கான டோர் சிலிப் ஆகியவற்றையும் வழங்கினர். உடனடியாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும்படி அறிவுறுத்தினார் அவிநாசி தொகுதியில் எட்டு மணி நேரத்துக்கு ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தஸ்தில் ஒரு அதிகாரியும், ஒரு போலீஸ் எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் அன்னுார் வட்டாரத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று வெளிப்படையாக ஆயிரக்கணக்கில் பணம் வழங்கி வருகின்றனர். பறக்கும் படையினர் இதை கண்டு கொள்ளாமல் உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து புகார் கூற இருப்பதாக பா.ஜ., வடக்கு வட்டார தலைவர் திருமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை