மேலும் செய்திகள்
கட்டட கழிவால் பாதிப்பு
22-Dec-2025
சிறுத்தை உலா
22-Dec-2025
பந்தலுார், : சேரம்பாடி வனப்பகுதியில் குப்பை கொட்ட தடைவிதித்து, ஊராட்சி நிர்வாகத்துக்கு வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.பந்தலுார் சேரம்பாடி வனப்பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பாக, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், ஊராட்சி தலைவருக்கு அனுப்பி உள்ள 'நோட்டீசில்' கூறியுள்ளதாவது:சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட சப்பந்தோடு மற்றும் குழிவயல் பகுதி சேரம்பாடி காவல் பகுதிக்கு உட்பட்டது. வருவாய் துறைக்கு சொந்தமான இந்த வனப்பகுதியில் சேரங்கோடு ஊராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், ஊராட்சி குப்பை லாரியில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால், உணவிற்காக வந்து செல்லும் வனவிலங்குகள் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், பொதுமக்கள் இந்த வழியை கடந்து செல்வதால் வனவிலங்குகளால் அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டி உள்ளதால், வனத்துறை ஒட்டி உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் சேரங்கோடு ஊராட்சி மூலம் சேகரிக்கும் குப்பை கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
22-Dec-2025
22-Dec-2025