உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காலில் காயத்துடன் குட்டி யானை: கண்காணிப்பில் வன ஊழியர்கள்

 காலில் காயத்துடன் குட்டி யானை: கண்காணிப்பில் வன ஊழியர்கள்

கூடலுார்: முதுமலை, மசினகுடி சிங்கார வனப்பகுதியில், இடது காலில் காயத்துடன் சிரமப்பட்டு வரும் குட்டி யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலை, மசினகுடி வனக்கோட்டம் சிங்கார வனப்பகுதியில் உலா வரும் காட்டு யானை கூட்டம், சில தினங்களுக்கு முன் சாலையை கடந்து சென்றது. கூட்டத்தில் உள்ள குட்டி யானையின், இடது கால் தரையில் ஊண முடியாமல், வலது காலை மட்டும் பயன்படுத்தி, சிங்கார சாலையை கடந்து சென்றது. அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், அதனை பதிவு செய்து, வெளியிட்ட 'வீடியோ' சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தொடர்ந்து, கூட்டத்தில் உள்ள குட்டி யானை யை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,'கடந்த, 18ம் தேதி இந்த கூட்டத்தை, வன ஊழியர்கள் பார்த்துள்ளனர். அப்போது யானை குட்டியின் காலில் எந்த பாதிப்பும் இல்லை. சில தினங்களுக்கு முன், அதன் இடது காலில் கண்ணாடி பாட்டில் அல்லது முள் குத்தி காலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். வன ஊழியர்கள் தனி குழு அமைத்து குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். காலில் ஏற்பட்ட பாதிப்பு, தானாக சீராக வாய்ப்புள்ளது. அதற்கான வாய்ப்பு இல்லை எனில், கால்நடை டாக்டர் ஆலோசனைப்படி, சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி