உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

பாலக்காடு; பாலக்காட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை காங்., கட்சியினர் அனுசரித்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு கோட்டை மைதானம், தியாகிகள் மண்டபத்தில் மாவட்ட வட்டார காங்., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர்.அவரது உருவப்படத்துக்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு, வட்டார காங்., தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். மாநில காங்., தலைவர் பாலகோபால், கட்சியின் தொகுதித் தலைவர் சுதாகரன், மாவட்ட காங்., குழு உறுப்பினர் காதர் முகமது, சிறுபான்மைத் துறை மாநிலச் செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை