| ADDED : நவ 20, 2025 02:28 AM
ஊட்டி: ஊட்டியில், மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், 109 மாணவியருக்கு, 5.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா சைக்கிள் வழங்கி பேசியதாவது: பள்ளி கல்வித்துறையின் முக்கியத்துவம் கருதி, மாநில முதல்வர் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். விலையில்லா சீருடைகள், நோட்டு புத்தகம் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், 1.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 17,718 விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டில், 3,624 மாணவ மாணவியருக்கு, 1.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., கணேஷ், மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.