உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

ஊட்டி:ஊட்டியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதார திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.அதில், டாக்டர்கள் நிர்மலா மற்றும் ஜெய விக்னேஷ் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அதில், கை, கால்கள் இல்லாதவர்களுக்கு செயற்கை கால் பொருத்தி, உபகரணம் வழங்க அளவு எடுக்கப்பட்டது.மேலும், கண் கோளாறு உள்ளவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு, ரோட்டரி சங்கம் மூலம் கல்வி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் உட்பட செவிலியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, ஊட்டி பி.எஸ்., மருத்துவமனை நிர்வாகி பாலசுப்ரமணியம் தலைமையில், நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி