இரவினில் ஆட்டம் பகலினில் துாக்கம்
பந்தலுார்:பந்தலுார் சுற்றுப்புற பகுதியில் இரவில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானை, நேற்று விலங்கூர் பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.பந்தலுார் அருகே நெலாக்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் சுற்றிவரும் யானை, இரவு, 8:00 மணிக்கு மேல் பஜார் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.இதனால், நெலாக்கோட்டை, விலங்கூர் பகுதி பொதுமக்கள் இரவு, 7:00 மணிக்கு மேல் வெளியில் நடமாட அச்சப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை முதல் விலங்கூர் பகுதி வயல்வெளியில், ஹாயாக படுத்து உறங்கியது. பொதுமக்கள் சப்தம் எழுப்பியும் எழவில்லை. யானை ஊருக்குள் வருவதை பார்த்து பயந்து ஓடும் மக்கள், நேற்று பகல் யானையின் உறக்கத்தை பார்த்து ரசித்தனர். எனினும், இரவில் யானை வரும் என்பதை உணர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.