மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை பகுதிகள்
40 minutes ago
ஓணிக்கண்டி பஸ் நிறுத்தத்தை கவனியுங்க ஆபீசர்
41 minutes ago
பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு
1 hour(s) ago
சேரம்பாடியில் தலைக்கு மேல் ஆபத்து!
1 hour(s) ago
குன்னூர்:: குன்னூரில் சாலையோரங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் தோல்வியை கண்டுள்ள நிலையில், முறையாக திட்டம் வகுக்காத போலீசார் சுற்றுலா, உள்ளூர் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஓட்டல்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் உட்பட உள்ளூர் வணிக பகுதிகள் நேரடியாக சுற்றுலாவையும் சார்ந்துள்ளது. பார்க்கிங் மற்றும் போக்குவரத்து சிக்கல்களால், சுற்றுலா பயணிகள், வணிகர்கள், உள்ளூர் மக்கள் நாளுக்கு நாள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பொதுமக்கள் அவதி
மருந்துகள் வாங்கவும், மருத்துவமனைக்கு செல்ல அவசர காலங்களில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தும் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு தெரியாமலேயே வாகனங்களை புகைப்படம் எடுத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இந்த அபராதம், சரியான அறிவிப்புகள் அல்லது தெளிவான பார்க்கிங் அறிவிப்பு இல்லாமல் விதிக்கப்படுகின்றன. நெரிசல் மிகுந்த மவுன்ட் ரோடு உட்பட முக்கிய சாலைகளில் டூரிஸ்ட் டாக்சிகள் காலை முதல் மாலை வரை நிறுத்தி வைத்து, சுற்றுலா, உள்ளூர் வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. பார்க்கிங் வசதி உள்ள இடங்கள் அவசியமின்றி டாக்சி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை வாங்க வரும் மக்கள் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தினால் போலீசாரின் அபராதத்தில் சிக்கி கொள்கின்றனர். போலீசார் அடாவடி மவுன்ட்ரோட்டில் காலை முதல் மாலை வரை நாள் கணக்கில் நிறுத்தும் இந்த டாக்சிகளால், பள்ளி குழந்தைகள் சாலையில் நடந்து செல்லும் அவலமும் நீடிக்கிறது. இது தொடர்பாக பல புகார்கள் தெரிவித்தும் குன்னூர் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். தற்போது காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பிய சமூக ஆர்வலர் ஆல்பர்ட் ராஜ்குமார் கூறுகையில், சாலை விரிவாக்க பணிகளுக்கு பிறகு, சாலையோரத்தின் பல பகுதிகள் அங்கீகரிக்கப்படாத வாகனங்களால் நிரந்தர ஆக்கிரமிப்பில் உள்ளது. குறிப்பாக, பார்க்கிங் என கூறும் இடங்களில் டாக்சிகள், ஆட்டோக்கள் நாள் முழுவதும் ஆக்கிரமித்து, எந்த ஒழுங்கு முறையும் இல்லாமல் இரவும், பகலும் நிறுத்தப்படுகின்றன. சாலையோரங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் தோல்வியை கண்டுள்ளனர். சட்டப்பூர்வமாக நிறுத்தும் வாகனங்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு வலுக்கட்டாயமாக அகற்றப்படுகின்றன. அரசியலமைப்பின் பிரிவின் கீழ், பேச்சு மற்றும் கருத்து, சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக போலீசார் செயல்படுகின்றனர். சில போலீசார் தொப்பி உட்பட சரியான உரிய சீருடை அணியாமல் பணியில் ஈடுபட்டு, அப்பாவி பயணிகளுடன் தேவையற்ற வாக்குவாதம் செய்கின்றனர். எதிர்பாராத அபராதத்தால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியுடன் சென்று மீண்டும் நீலகிரிக்கு வருவதை தவிர்ப்பதுடன், மாவட்டத்தின் மீது எதிர்மறையான தோற்றமும் ஏற்படுகிறது, '' என்றார். தற்போதைய போக்குவரத்து அமலாக்கத்தை மதிப்பாய்வு செய்து நியாயமான நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும். அபராதம் விதிக்கும் முன் தெளிவான, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நோ பார்க்கிங்கில் அடையாள பலகை நிறுவ வேண்டும். முக்கிய சாலைகளில் அங்கீகரிக்கப்படாத நீண்டகால வாகன நிறுத்துமிடங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி இடங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
40 minutes ago
41 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago